என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அண்ணா நினைவிடம்"
- மக்களின் நன்றி கலந்த வாழ்த்தும், புன்னகை அரும்பும் முகங்களும்தான் இன்னும் இன்னும் உழைக்கத் தூண்டுகிறது.
- நம்பிக்கையோடு முன் செல்கிறேன். பெருமையோடு சொல்கிறேன்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சி கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் 7-ந்தேதி பதவி ஏற்றது. தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவு பெற்று இன்று 4-ம் ஆண்டு தொடங்குவதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
இது சொல்லாட்சி அல்ல, செயலாட்சி. மக்களின் நன்றி கலந்த வாழ்த்தும், புன்னகை அரும்பும் முகங்களும்தான் இன்னும் இன்னும் உழைக்கத் தூண்டுகிறது. நம்பிக்கையோடு முன் செல்கிறேன். பெருமையோடு சொல்கிறேன். தலை சிறந்த மூன்றாண்டு தலை நிமிர்ந்த தமிழ்நாடு என்று கூறினார்.
இந்நிலையில், திமுக ஆட்சி பெறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து, சென்னை மெரினாவில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
அவருடன் தி.மு.க. பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன், தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் பொன்முடி, சேகர்பாபு, எ.வ.வேலு ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
- தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது 71-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.
- கருணாநிதி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னை:
தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று 71-வது பிறந்தநாள். இதையொட்டி அவருக்கு வாழ்த்து சொல்ல அண்ணா அறிவாலயத்திலும் அவரது வீட்டு முன்பும் ஏராளமான தொண்டர்கள் காலையிலேயே குவிந்திருந்தனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலையில் எழுந்ததும் வீட்டில் இருந்த கலைஞரின் படத்துக்கு மாலை அணிவித்து வணங்கி விட்டு குடும்பத்தாருடன் 'கேக்' வெட்டினார்.
அவருக்கு மனைவி துர்கா, மகன் உதயநிதி ஸ்டாலின், மகள் செந்தாமரை மற்றும் குடும் பத்தினர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
அதன் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மெரினா கடற்கரைக்கு சென்று அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார்.
இதைத் தொடர்ந்து வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்துக்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பெரியார் திடலில் திராவிட கழக தலைவர் கி.வீரமணி வரவேற்று வாழ்த்து தெரிவித்தார். மேளதாளம் முழங்க அங்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பொதுச்செயலாளர் துரைமுருகன், டி.ஆர்.பாலு எம்.பி, ஆ.ராசா, அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரிய சாமி, எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், சக்கர பாணி, அன்பில் மகேஷ், சென்னை மேயர் பிரியா, பரந்தாமன், புழல் நாராயணன், மதன் மோகன் மேற்கு மாவட்ட கழக செயலாளர் நே.சிற்றரசு உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் உடன் வந்திருந்தனர். கலைஞர் நினைவிடத்தில் அவரது உத வியாளர் கே.நித்யா நினைவு பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அவருடன் தலைமை பொதுக்குழு உறுப்பினர் பல்லாவரம் மு.ரஞ்சன் மற்றும் நிர்வாகிகளும் வாழ்த்து தெரிவித்தனர்.
தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதி கடந்த 7-ந் தேதி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது உடலை அடக்கம் செய்ய மெரினா கடற்கரை அண்ணா நினைவிடம் அருகே இடம் ஒதுக்க தி.மு.க. சார்பில் தமிழக அரசிடம் கேட்கப்பட்டது. ஆனால், சட்ட சிக்கல் காரணமாக கருணாநிதிக்கு கிண்டி காந்தி மண்டபம் அருகில் 2 ஏக்கர் நிலம் ஒதுக்குவதாகவும், மெரினாவில் இடம் அளிக்க முடியாது என்றும் தமிழக அரசு திட்ட வட்டமாக அறிவித்தது.
இதைத்தொடர்ந்து தி.மு.க. சார்பில் ஐகோர்ட்டில் அவசர வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் இடம் ஒதுக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு மேல் முறையீட்டுக்கு செல்லாமல், அண்ணா நினைவிடம் அருகே கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய 1.75 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி கொடுத்தது. அந்த இடத்தில் கருணாநிதியின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
மெரினா கடற்கரை அண்ணா நினைவிடம் அருகே கருணாநிதியை அடக்கம் செய்ய 1.75 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டதற்கான அரசாணை நேற்று மாலை வெளியிடப்பட்டது.
இந்த தகவலை தி.மு.க. வக்கீல் ஒருவரும் உறுதிப்படுத்தினார். இது குறித்து அவர் கூறும்போது, ‘மெரினா கடற்கரை அண்ணா நினைவிடத்தில் கருணாநிதியை அடக்கம் செய்ய 1.75 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டு இருக்கிறது. இதை என்னிடம் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்’ என்றார். #Karunanidhi
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்